நான் பாக்கியவானே....
கனாவில் வரைந்த ஓவியம்,கண்முன் கானல் நீராய் கரைந்திடும் பொழுதும், களங்காமல் நிற்கும்,
நான் பாக்கியவானே....
என் கரம் பிடித்திடவேண்டியவள் , எவனோ ஒருவன் கரம் பிடிக்கும் காட்சிதனை காண கிடைத்த,
நான் பாக்கியவானே....
என்தோள் சாய்ந்து அவள் வினாவிய ஆசைகள் பல்லாயிரம்,அவற்றை நிறைவேற்றும் வேலை இனி எனக்கில்லை,
நான் பாக்கியவானே....
குறுஞ்செய்தி கொஞ்சல்கள்,காரணமில்லா சண்டைகள்,தவறு செய்திடா மன்னிப்புகள்,நீண்ட நெடிய கைபேசி உரையாடல்கள் என அனைத்திற்கும் இன்றுமுதல் விடுமுறை காலமே,
ஆகையால் நான் பாக்கியவனே....
எதிர்கால நாட்களில்,உனக்கான சுமையாய் நான் இருந்திட மாட்டேன்,என கூறிய நீ ,எதிர்கால நாட்களில் என்னுடனே இருக்க மாட்டாய் என்பதை கூறியிருந்தால்,எதிர்பார்ப்புகளால் ஏமாறாமல் இருந்திருப்பேன்,
இருப்பினும் நான் பாக்கியவானே....
-ந.மகேந்திரன்

0 Comments