ஏமாற பழகிக்கொள்...

நம் வாழ்க்கை, தொடக்கம் முதலே ஏமாற்றங்கள் நிறைந்தவை தான்,

பின்னாளில் நம்மை  அனைவரும் ஏமாற்றுவார்கள் என்று முன்கூட்டியே அறிந்ததாலோ என்னவோ,பிறந்த முதல் ஆண்டிலேயே, நாம் சோறு உண்ண நிலாவில் பாட்டியை வடை சுட வைத்துவிட்டாள் அம்மா.

அன்று முதல் அனைத்தும் ஏமாற்றமே.

சாப்பிடாவிட்டால் பூச்சாண்டி வரும் என்று தாத்தா கூறியது,

செருப்பணிந்து வா, என்னுடன் கூட்டி செல்கிறேன் என்ற அப்பாவின் வாக்கு,

நேர்மையுடன் இருந்தாலே சமூகம் மதிக்கும்,பொய் பித்தலாட்டங்களை சமூகம் மிதிக்கும் என்ற மூத்தோன் கூற்று,

சரியான சில்லறை கொண்டுவரமாட்டாயா? என்று கடித்துவிட்டு,இறங்கும் போது மீதி சில்லறை தருகிறேன் என்ற நடத்துனரின் பேச்சு.

வாழ்நாள் முழுக்க உன்னுனடன் இருப்பேன் என அவள் கூறியது,

கால நேரம் பார்க்காமல் உண்மையாக உழைத்தால் பணி உயர்வு வரும் என,  மேலாளர் கூறியது.

இப்பொழுது கஷ்டப்பட்டால் பிற்காலத்தில் நல்லா இருக்கலாம் என்று பள்ளி,கல்லூரி,வேலைபார்க்கும் அலுவலகம் என எல்லா இடத்திலும் போதிக்க பட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.........?அதிகாரத்திற்கு வந்தால்.......?என பக்கம் பக்கமாக அச்சிடப்பட்டு விநியோகித்த வாக்கிற்க்கான உறுதிகள்.

இன்னும் இப்பட்டியலில் இல்லாது மறைக்க பட்டவை பல..........

நம்மை ஏமாற்றுவதால் ஒருவன் இன்பம் கொள்கிறான் என்றால்,தாராளமாக ஏமாறு,ஒன்றும் கெட்டுவிட போவதில்லை.பிறர் மனம் நோகச்செய்தவனே நம்பிக்கையுடன் வாழும் பொழுது,நமக்கு என்ன பயம்...!

கர்மவினை செயலாகும்........

-ந.மகேந்திரன்

Post a Comment

0 Comments