கதவுகள் இல்லா அறையில் சிறைப்பட்டு கிடக்கும், என் வாழ்வுதனிற்க்கு விடுதலை கிட்ட வழியுண்டோ....?
சிறகுகள் முளைத்தும்,பறந்திட அறியா பறவை, தன் வாழ்வியலை நகர்த்திட வாய்ப்புண்டோ....?
கண்கள் திறந்தும் காண இயலாத வேடன்,இலக்கினை வீழ்த்துவதுண்டோ....?
உழுது விதைத்த வயல் முழுதும் மழைநீர் சூழ,விதை முளைத்திட விதியுண்டோ...?
கானல் நீரில் நீந்திடும் மீன் தூண்டிலில் மாட்டிடுமா...?
வீசும் காற்றினை, வெறும் விரல் தடுத்திடுமா...?
அமாவாசை நிலவுதான், ஒளி வீசிடுமா...?
என கேள்விக்குறியினை மட்டும் வைத்திருந்தால்,விளைவுகள் எதிர்மறையாய் தான் அமையும்.நிகழ்வது எதுவாயினும் எதிர்கொள்வோம், என்ற மனப்பாங்குடன் முயற்சி செய்தாலே ஏதேனும் ஒரு விளைவை காணமுடியும்.இல்லையேல் கிணற்றில் போட்ட கல்போலாகும் நம் வாழ்வியல்.ஆற்றில் போட்ட கல் கூட, அங்கும் இங்குமாய் நகரும்,கிணற்று கல் அசைவில்லாது அங்கேயே நின்றுவிடும்.
கடமைகளுக்கு மத்தியில் கனவினை துளைத்த பலரும் எதாவது ஓர் நாள் நம் நிலை மாறும் என்ற நம்பிக்கையிலையே ஓடுகின்றனர். தன் நிலை மாறப்போவதில்லை என்று அறிந்த பின்பும் கூட அவர்களது ஓட்டம் நிற்பதில்லை,ஏனென்றால் அவர்கள் கொண்ட நம்பிக்கை ஆகசிறந்தது.
இலக்கை அடைந்த பின்பும் கூட வாழ்க்கை பயணம் தொடரும், ஓட்டமும் தொடரும். நம்பிக்கை கொள் ,நற்பண்புகளை வளர்,பிறர் மனம் கோண செய்யாதே,முடிந்தவரை உதவு,நல்லுறவுக்கு சொந்தக்காரனாக இரு, நடப்பவை அனைத்தும் நன்மைக்கே.....
-ந.மகேந்திரன்

0 Comments