💗.நிரந்தரமற்ற இவ்வாழ்வியல் சூழலில் ,
நிபந்தனையற்ற உறவுகள் கிடைத்திடல் பாக்கியமே..!
💗.கருணை உள்ளத்தினையும்,
கருங்கல்லாய் மாற்றும் ஆற்றல் படைத்தது காலம்..!
💗.நிதர்சனம் அறிந்தும் கூட ,போலி முகமூடி அணிந்து வாழ்க்கை எனும்
நாடகமேடையை அலங்கரிக்கும் கோமாளிகள் நாம்..!
💗.கோட்டையை காத்த கம்பீரமான மதில் சுவர்கள் கூட ,
காலம் கடந்துவிட்டால் குட்டிசுவராகிவிடும்..!
💗.நிலையற்ற வாழ்வியல் தனில்,தனிமை மீது கொள்ளும் காதல்,
நடுக்கடலில் கவிழ்ந்த படகின் முதுகில் அமர்ந்த பயணம் போலாகும்,
கரையை அடையாவிட்டாலும் கூட,உயிருக்கு உத்தரவாதம் உண்டு ,
நமக்கான வழிகாட்டல் வரும்வரை..!
💗.அதீத கோபம் முட்டாளாக்கும்,அளவுகடந்த பொறுமை ஏமாளியாக்கும்,
எதுவாயினும் வரையறைக்குள் இருத்தல் அவசியம்..!
- ந.மகேந்திரன்

0 Comments