ஹைக்கூ - பகுதி 2

 


💗.காற்றாற்று வெள்ளம் தனில் கடத்திவரப்பட்ட மரக்கன்று,களிமண்,செம்மண் என கலங்கிநிற்பதுகிடையாது.கடும்பரையாயினும் வேரூன்றிடுமே......

💗.சூழ்நிலை கண்டு செயல்படுதல் அவசியமே....,ஆனால் சில சூழ்நிலைகளில் செயல்படாதிருத்தல் கூட அவசியமே....,

💗.அளவுமீறிய,பிறர்மீதான உரிமைகோரல் ஒரு கட்டத்தில் எதிர்வினை ஆற்றிடுமே,யார் அறிவர்,உறவினை முற்றிலுமாய் துண்டிக்க கூட செய்திடும். அளவறிந்து செயல்படுதல் அவசியமே.....,

💗.அனுபவம் தரும் தன்னம்பிக்கைக்கு ஈடாய் ஏதும் கிடையாது,தன்னம்பிக்கை இல்லா செயல் நிறைவேறாது.

💗.கதைகள்,கவிதைகள் என பலவற்றை எழுதி தேய்ந்த பேனா முனை கொண்டு மேஜை புற இடுக்கில் உள்ள அழுக்கினை நீக்குகிறான் ஒருவன்,      அப்பேனாவின் மனநிலையறியா ஒருவன்..காலம் கடந்தால் அனைவருக்கும் இக்கதியே ,காற்றுள்ளபோதே தூற்றல் அவசியம்.

💗.பல ஆண்டுகளாய் ஒளி புகா இருட்டு அறையினுள் பூட்டப்பட்டு  கிடப்பவனுக்கே தெரியும்,மேற்கூரையின் இடுக்கு வழியே வரும் சூரிய ஒளியின் அருமை,நமக்கானதை இழிவுபடுத்தும் முன் நினைவில் கொள் ,இதற்கும் வழியின்றி ஏங்கும்  உள்ளங்கள் உண்டு இம்மண்ணில்.

💗.நிபந்தனைகள் அற்ற உறவு, நிர்பந்தங்கள் அற்ற சூழல், எதிர்காலம் குறித்த கவலையற்ற வாழ்வியல், என மூன்றும் ஒருசேர  அமைந்திடல் வரமே,

💗. நம் மனதிற்க்கு நெருக்கமானவர்களை இழப்பது கொடிது,அதனைக்காட்டிலும் கொடிது நம் மனதிற்க்கு நெருக்கமானவர்களால் இழக்கப்படுவது.

💗.நிற்க நேரமில்லாது ஓடும் கூட்டம் ஒரு நாள் உடல் மெலிந்து, ஓய்ந்து உட்காரும் வேளையில்,அசைபோட அழகிய நினைவுகள் இல்லாது தவிக்கத்தான் செய்யும்.

💗.தன் மீது அக்கறைகொள்ள யாருமில்லை, என்று ஏங்கி நின்றவனை பார்த்து குறைந்த நாயினை கண்டு கண்களில் நீர்த்துளி கோர்த்தது. 


                                                                                                                     - ந.மகேந்திரன் 

Post a Comment

0 Comments